சாலையில் திரியும் கால்நடைகள்;

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் சுற்றித்திரியும்‌ கால்நடைகளை பிடித்து காந்தல்‌ "பவுண்ட்ஸ்" காப்பகத்தில் அடைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2024-05-22 13:37 GMT

கால்நடைகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி சாலைகளில் வளர்ப்பு கால்நடைகள் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்நிலையில், நகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளை நகராட்சி பணியாளர்கள்‌ உதவியுடன் பிடித்து காந்தலில் உள்ள "பவுண்ட்ஸ்" காப்பகத்தில் அடைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் அவ்வாறு பிடிக்கப்படும்‌ ஆடு, மாடு மற்றும்‌ குதிரைகளை பிடிக்கப்பட்ட தினமே திரும்ப பெறுவதற்கு ரூ.2000 அபராதம்‌ விதிக்கப்படும்‌. கால்நடைகளை திரும்ப பெறுவதற்கு தாமதபடுத்தும்‌ ஒவ்வொரு நாளுக்கும்‌ பராமரிப்பு தொகையாக நாள்‌ ஒன்றுக்கு ரூ.500 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் ஒரே கால்நடைகள்‌ மூன்று முறைக்கு மேல்‌ பிடிக்கப்பட்டால்‌, அதனை விலங்குகள்‌ வதை தடுப்பு சங்கத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News