திறந்தநிலை பல்கலைக்கழகம் : சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்புகளுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Update: 2024-03-10 02:46 GMT

திறந்தநிலை பல்கலைக்கழகம்  

சென்னை பல்கலைக்கழக உதவியாளர்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில், பிரிவு அதிகாரி பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக உதவி பதிவாளர் பணி வழங்கவில்லை கோரிய மேல்முறையீடு வழக்குகளைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு உத்தரவிட்டுள்ளது. பிரிவு அதிகாரியாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News