ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றார்.

Update: 2024-03-30 07:33 GMT

ஆர்.எம்.டி.டீக்காராமன்

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், வேலூர் பொறுப்பு நீதிபதியுமான (போர்ட்போலியோ) ஆர்.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் திறந்து வைத்தார்.
Tags:    

Similar News