அமைச்சரின் பேட்டிக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

ஏற்கனவே, ஆறுகள் தூர்வாரப்பட்டிருந்தாலும் எவ்வித பெரும் பாதிப்பும் ஏற்படவில்லை என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2024-07-01 14:35 GMT

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டது. பாதிக்கப்பட்ட 28 குடும்பத்தினர் அம்பலமூலா மற்றும் பொன்னானி பகுதியில் ஏற்படுத்தப்படட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சட்டசபை நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் ஏற்ப்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் முதற்க்கட்ட நிதியுதவியை வழங்கினார். நிருபர்களிடம் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன்," வரலாறு காணாத அளவிற்கு பந்தலூரில் 28 செமீ மழை பெய்துள்ளது.

ஏற்கனவே ஆறுகள் தூர்வாரப்பட்டிருந்தாலும் எவ்வித பெரும் பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மழையின் தாக்கம் குறையாததால் தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும், மழை பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட 28 பழங்குடியினர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார். இந்நிலையில் அமைச்சரின் பேட்டிக்கு பந்தலூர் பகுதி மக்களிடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Tags:    

Similar News