ஓபிஎஸ் எனக்கு வழி விட்டுள்ளார் - டிடிவி தினகரன்

தேனியில் நான் போட்டியிட வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் அழைத்தனர். அதற்கு முன்பு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தேன். நான் இங்கு போட்டியிட ஓபிஎஸ் வழிவிட்டுள்ளார்.என டிடிவி தினகரன் தெரிவித்தார்.;

Update: 2024-03-24 07:47 GMT

டிடிவி தினகரன்

தேனி - ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர் பேசுகையில். அமமுக வேட்பாளர்களாக தேனியில் டிடிவி தினகரன், திருச்சியில் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வர உள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி மூலம் பெற்றுத் தருவேன். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

Advertisement

தங்க தமிழ்ச்செல்வனும்  நீங்களும் போட்டியிடுகின்றனர் குரு சிஷ்யன் போட்டி என எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் எனக்கு குரு, நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை. மக்கள் செல்வர் என்ற பட்டம் தேனி தொகுதி மக்கள் தான் வழங்கினார்கள். டிடிவி என்றால் தொகுதிக்கு தவறாமல் வருபவர் என்ற விளக்கமும் தேனியில் தான் அறிவித்தனர். அதிமுகவை போட்டியாக நான் கருதவில்லை. கடந்த காலங்களில் திமுக அளித்த தேர்தல் அறிக்கையை போல தற்போது மக்களை ஏமாற்ற முடியாது. அனைத்து நாடுகளும் பணவீக்கத்தில் சிக்கியுள்ள நிலைய, மோடியின் ஆட்சியால் இந்தியா சிறப்பாக இருக்கிறது.

இங்கு நான் போட்டியிட வேண்டும் என் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் அழைத்தார். எனக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் தான் இருந்தேன். நான் இங்கு போட்டியிட ஓபிஎஸ் வழிவிட்டுள்ளார். அதிமுகவை நான் போட்டியாக நான் கருதவில்லை. வரும் காலங்களிலும் பாஜகவுடன் அமமுக கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News