சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-14 14:39 GMT

ஈபிஎஸ், ஓபிஎஸ் 

அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அருகே ஓபிஎஸ் இருக்கை இருந்து வந்தது. அதிமுக பிளவிற்கு பின் அதை மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் இதனை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ள ஆர் பி உதயகுமாருக்கு ஓ பன்னீர்செல்வம் இருந்த இருக்கையை ஒதுக்கீடு செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்‌.

Tags:    

Similar News