ஓபிஎஸ், பாஜகவுக்கு போய் விடுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ், பாஜகவுக்கு போய் விடுவார், பாஜக ஒரு வேஸ்ட் லக்கேஜ் நேரம் வரும்போது கழட்டி விடலாம் என்று இருந்தோம். இப்போது கழட்டி விட்டு விட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார் .

Update: 2024-04-14 04:50 GMT

ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 48 மற்றும் 53 வது வார்டுகளில் அதிமுக வடசென்னை மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ராயபுரம் ஆர் மனோகரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கிருஷ்ணன் கோவில் அருகில் பேட்டி அளித்தவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேராதரவோடு, வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.  விடியா அரசில் மக்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளாகின்றனர். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை சுட்டி காட்டியவர், மாநில உரிமையை மீட்க பாடுபட்டது அதிமுக தான்.  மீனவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொழில் செய்ய வேண்டும். 

பாஜக , திமுக அரசுகள் மாநில உரிமையை மீட்காமல், கச்சத்தீவு, காவிரி விவகாரம் உட்பட நமது உரியையை விட்டு கொடுத்தார்கள். ஆளும் விடியா அரசு மக்களை ஏமாற்றி தமிழக மக்களுக்கு பட்டை நாமத்தை கொடுத்துள்ளார்கள்.அண்ணாமலை காவல் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். கச்சத்தீவு வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.  அண்ணாமலை என்று போர்டு போட்டு இங்கு ஆருடம் பார்க்கப்படும் என்று சொல்லலாம். முதலில் உங்கள் கட்சியை பாருங்கள்.  டிடிவி தினகரன் குறித்து பேசியவர், ஆர்.கே நகரில் தெரு தெருவாக பிரச்சாரம் பண்ண முடியுமா?  யாருக்காக இந்த மத்திய அரசு/ மோடி அரசு இருக்கிறது? எல்லா மிட்டா மிராசுதார்கள், கோடீஸ்வரர்களுக்காக தான் மோடி அரசு இருக்கிறது. 

சாதாரண மக்கள் 10 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கினால் எத்தனை முறை கேட்கிறார்கள். ஆனால் 10 ஆயிரம் கோடி கடன் வாங்கியவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி அரசு பாஜகவிடம் ஆட்சியை அடகுவைத்ததாக திமுக குற்றச்சாட்டை சொல்லுவது குறித்து பேசியவர், பொய்களின் புளுகுமூட்டை ஸ்டாலின் தான். நீட்டை கொண்டு வந்தது யார்? நீட் தேர்வு உட்பட மாநிலத்தின் பல உரிமைகளை திமுக விட்டு கொடுத்தது. மத்தியில் நீங்கள் 17 வருடங்கள் இருந்தும் என்ன செய்தீர்கள்? தேர்தலுக்கு பிறகு ஓபிஎஸ், பாஜகவுக்கு போய் விடுவார்.

25 வருடமாக ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நாங்கள் தோற்றோம். நானே தோற்றேன். பாஜக வேஸ்ட் லக்கேஜ்.‌ நேரம் வரும் போது கழற்றி விடலாம் என்று இருந்தோம். தற்போது கழட்டி விட்டதாகவும் கூறினார். தொடர்ந்து, ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது பொதுமக்கள் மலர் தூவி பலர் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தி சேகரிக்க வந்திருந்த ஒளிப்பதிவாளர்களின் கேமராவை வாங்கி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ பதிவு செய்தார். நடன கலைஞர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News