வைகோவுக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க உத்தரவு.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-04-24 15:58 GMT
கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் ஆகியோருக்கு எதிராக வழக்கப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு தடை கோரியும், வழக்கை ரத்து செய்யவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.