இரண்டு வாரங்களில் விளக்கம் அளித்த உத்தரவு

பொது வினியோக திட்டத்துக்காக எந்த அடிப்படையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்று 2 வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Update: 2024-06-15 15:28 GMT

துவரம் பருப்பு

 பொது வினியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலை கொண்ட மைசூர் பருப்பை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது. தமிழக மக்கள் மைசூர் பருப்பை விட துவரம் பருப்பையே அதிகம் விரும்புகின்றனர் என்பதால் தான் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் மசூர் பருப்பும் கொள்முதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
Tags:    

Similar News