விபத்தில் சிக்கியவர் மது அருந்தி இருந்தால் அளவை பதிவு செய்ய உத்தரவு
விபத்தில் சிக்கியவர் மது அருந்தி இருந்தால் அளவை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விபத்துக்களில் சிக்கி மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மது அருந்தி இருந்தால், அதன் அளவை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை செயல்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கவும் உத்தரவு அளிக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்று காயமடைந்த ரமேஷ் என்பவர் இழப்பீடு கோரி பெரம்பலூர் விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தி்ல் வழக்கு தொடர்ந்தார். ரமேஷ் மது அருந்தி இருந்ததாலும் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றாததாலும் விபத்துக்கு அவரும் காரணம் எனக் கூறி, 50 சதவீத இழப்பீடி வழங்கி உத்தரவு அளிக்கப்பட்டது.
மதுபானத்தை அரசே விற்கிறது. மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கருத்து.