குடிநீர் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில்குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருன்ராஜ் உத்தரவிட்டார்.

Update: 2024-05-08 14:06 GMT

குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருன்ராஜ் உத்தரவிட்டார்


அரியலூர், மே 8- அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டத்தில், கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து மேற்கொள்ளபட்ட முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்ட அவர், கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மற்றும் செய்திகளின் மீது தனிக் கவனம் செலுத்தி அப்பகுதிகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஏரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய கிணறு போன்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் மாது, வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். படவிளக்கம்: கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து அரியலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கண்காணிப்பு அலுவலர் அருண்ராய்.

Tags:    

Similar News