வணிக வளாக வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் முன் வணிக வளாகம் கட்ட தடை கோரிய வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-05-01 09:06 GMT
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு கோபுரம் முன் வணிக வளாகம் கட்ட ஒப்புதல் வழங்கிய அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், கோவில் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற. தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளார். 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ராஜ கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவது என்பது கோயில் விழாக்களுக்கு இடையூறாக அமையும். பக்தர்கள் வந்து விழா காலங்களில் பங்கேற்பதற்கு தடையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சந்திரசேகரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கோவில் வழிபாட்டாளர்கள் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.