உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் அஞ்சலி
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்து உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.;
Update: 2024-01-09 11:30 GMT
ஆட்சியர் அஞ்சலி
திருவள்ளூர் நகரம் காந்திபுரம் ஜி .என் சாலையில் வசித்து வந்த ராஜேஷ் என்பவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று தமிழக முதலமைச்சர் அறிவிப்பின் படி அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.