ஓ.ஆர்.எஸ். கரைசல் விநியோகம்: சென்னை ஆணையர் ஆய்வு

குடிநீர் வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்து சென்னை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-30 06:24 GMT

குடிநீர் வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்து சென்னை ஆணையர் ஆய்வு செய்தார்.


பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட புளியந்தோப்பில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்தினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சைக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வழங்கப்படுவது குறித்தும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News