பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் ரகளை
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தில் பேனர்கள் வைத்துக் கொண்டு கோஷங்கள் எழுப்பியபடி கல்லூரிக்குள் நுழைய முயற்சித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 15:12 GMT
மாணவர்கள் ரகளை
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பாரிமுனையிலிருந்து பூந்தமல்லி செல்லும் 15 எண் கொண்ட மாநகரப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் பேனர்கள் மற்றும் மாலை எடுத்துக் கொண்டு பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க முயற்சி செய்தனர்.
மேலும், பச்சையப்பாஸ்கு ஜே என கோஷம் எழப்பிபடி நின்று கொண்டிருந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் கேட்டினை பூட்டி மாணவர்களை உள்ளே அனுமதிக்காததால்கோஷமிட்டபடி கல்லூரி கேட்டின் அருகே கூட்டமாக நின்றனர்.