பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்கு பதிவு!
பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-01-19 15:45 GMT
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக சிறுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.