அரக்கோணம் பாமக வேட்பாளர் யார் தெரியுமா?

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக செய்தி தொடர்பாளர் பாலு போட்டியிடுகிறார்.

Update: 2024-03-22 06:51 GMT

பாலு

பாஜக அதிமுக கூட்டணியில் அரக்கோணம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளரை பாமக நிறுவனர் ராமதாசு அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் பாட்டாளி மக்கள் கட்சி செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே பாலு அரக்கோணம் தொகுதி வேட்பாளராக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாலு அரக்கோணம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News