பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா: முன்னேற்பாடுகள் தீவிரம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2024-03-23 14:08 GMT

குண்டம் விழாவிற்கு வந்துள்ள விறகுகள்

சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் ... டன் கணக்கில் எரி கரும்பு குவிப்பு ... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா வருகின்ற 26-ம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற உள்ளது.

இதை அடுத்து கடந்த ஒரு வாரமாக குண்டம் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் வரிசையாக நின்று குண்டம் இறங்குவதற்கு வசதியாக, தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் இடத்தில் மரக்கடை அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் தானமாக டன் கணக்கில் வேம்பு மற்றும் பூஞ்ச மரங்களை உபயமாக கொண்டு வந்து குவித்து வருகிறார்கள்.

Advertisement

இன்று வரை சுமார் 10 டன் எரி கரும்பு குண்டம் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஏராளமான இடங்களில் அன்னதானம் வழங்க தன்னார்வலர்கள் பந்தல் அமைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இரண்டு இடங்களில் தீயணைப்பு துறையினர் வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதற்காக உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க தனி இடங்கள் அமைக்கப்பட்டு, குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News