நள்ளிரவிலும் தொடர்ந்த பிஏபி விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்

கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பொள்ளாச்சி அருகே பிஏபி விவசாயிகள் நள்ளிரவிலும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-23 01:14 GMT

கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள் நள்ளிரவிழும் அதே இடத்தில் உணவு சாப்பிட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி.. ஏப்ரல்..22 பரம்பிகுளம்  ஆழியார் பாசனத் திட்டத்தின் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாவது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது,. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது,  

இந்நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் கிளை கால்வாய்க்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.. எனவே அரசு ஆணைப்படி கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி இன்று பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறி நின்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இரவு வரை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் விவசாயிகள் அதே இடத்தில் உணவு அருந்தி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

தற்போது திறந்துவிடபட்ட தண்ணீர் மூலம் கடைமடை விவசாயிகள் வரை பயன் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து இந்த காத்திருப்பு போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர்.. விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரிகள் வராததாது கவலை அளிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் மேலும் கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வரை இதே பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறி இரவு உணவை அதே இடத்தில் சாப்பிட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருவதால் கோவை மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையில் இந்த பகுதியில் சுமார் 60.க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News