சின்னமலை மெட்ரோரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறப்பு
சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.;
Update: 2024-02-16 10:49 GMT
சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.
பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு 19.02.2024 முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் தங்களின் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.