கூட்டணியில் அதிமுகவை இழுக்க சாமியாரை அனுப்பும் பாஜக..!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக தகவல்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி உறுதி செய்வதற்காக ஆன்மீகவாதி ஒருவரை பேச்சுவார்த்தைக்கு பாஜக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வ்ருகின்றனர். திமுக தனது தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை உறுதி செய்து வரும் நிலையில், அதிமுகவும் பேச்சுவார்த்தை குறித்த பேச்சை தொடங்கியுள்ளது. அதிமுகவுடன் பாமக மற்றும் தேமுதிக பேச்சுவார்த்தைநடத்தி வருகின்றனர். ஆனால், இரு கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் அதிமுகவுடன் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் பாஜக விடையே விரிசல் ஏற்பட்டதுடன், பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். லோக்சபா தேர்தல் மட்டுமில்லாமல், 2026ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியுள்ளது. எனினும், அதிமுகவுக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.
எனினும் பாஜகவை நேரடியாக விமர்சிக்காத எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் மட்டும் இல்லை என்று கூறினார். பாஜகவை நேடியாக எடப்பாடி விமர்சிக்காததால், பாஜக கூட்டணி மீண்டும் அமையலாம் என்று கூறப்படுகிறது. இந்தசட்டமன்ற தேர்தலின் மூலம் தென்னிந்தியாவில் பலமாக காலூன்ற நினைக்கும் பாஜக தமிழகத்தில் இருந்து மத்தியில் ஒரு அமைச்சர் வரவேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக வெற்றிப்பெற வேண்டும் என்றால் அதற்கு அதிமுகவின் உதவி தேவைப்படுகிறது. அதிக தொண்டர்களையும், சில பகுதிகளில் அதிக பலத்தையும் கொண்டிருப்பதால் அதிமுகவின் கூட்டணியை பாஜக விட்டு கொடுக்க விரும்பவில்லையாம். இதற்காக கோவையை சேர்ந்த ஒரு சாமியாரை வைத்து அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக திட்டமிட்டதாக அக்கட்சியின் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாஜக மற்றும் அதிமுகவுடன் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் பேச்சுவார்த்தைக்கு சரிவாருவாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
அதேநேரம் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முனைப்பில் செயல்பட்டுவரும் அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுமட்டுமில்லாமல் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற எஸ்பிடிஐ கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
பாமக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவர்த்தை நடத்தி வரும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக ஓரிடத்திலாவது வெற்றிப்பெறும் என்பது கட்சியின் தலைமை கணக்குப்போட்டுள்ளது. இந்த சூழலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்லும் ஆன்மீக குரு எடப்பாடி மனசை மாற்றுவாரா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.