பகுதி நேர வேலை மோசடி: ரூ.6 லட்சம் மோசடி

பகுதி நேர வேலை தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ஆன்லைனில் ரூபாய் 6 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-12-16 12:06 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரியை சேர்ந்தவர் கமலா (34), பெயர் மாற்றப்பட்டுள்ளது. பட்டதாரியான இவர் சிவில் சர்வீஸ் தேர்வெழுத படித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த ஜூலை மாதம், பகுதி நேர வேலைக்கு தொடர்பு கொள்ளவும் என ஒரு மெசேஜ் வந்துள்ளது.

அதனை பார்த்த கமலா, குறிப்பிடப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசிய நபர், யூ.டியூப்பில் வரும் வீடியோவை லைக் செய்து, ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பினால், ஊதியத்தை அனுப்புவோம் எனக்கூறியுள்ளார். அதன்படியே யூடியூப் பதிவுகளை லைக் செய்ததற்கு குறைந்த அளவு பணத்தை அனுப்பியுள்ளனர். பிறகு, ஷ தான் கூறும் இணையதளத்தில் ஆன்லைனில் பண முதலீடு செய்தால்,

அதிகளவு கமிஷன் தருகிறோம் என கமலாவிடம் மர்மநபர் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய கமலா, குறிப்பிட்ட இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பண முதலீடு செய்துள்ளார். மொத்தமாக 27 தவணைகளில் ₹6,11,502 செலுத்தியுள்ளார். அதற்கு ₹5,530 கமிஷனாக வந்துள்ளது.

பிறகு அந்த நபர் தொடர்பு கொள்ளவே இல்லை. இதனால், தன்னிடம் ₹6,05,972ஐ மர்மநபர் மோசடி செய்ததை உணர்ந்த கமலா, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News