சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது - முதல்வர் எச்சரிக்கை.
சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை...
Update: 2024-02-23 08:33 GMT
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திருப்தியாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் பணிகள் மந்தமாக இருக்கிறது. சரியாக செயல்படும் நிர்வாகிகளுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும். 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் அதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிமட்ட தொண்டர்களின் எண்ணம் பிரதிபலிப்பை வைத்தே கட்சி தலைமை செயல்படும் நடவடிக்கையும் எடுக்கும் தேர்தல் மற்றும் கட்சி பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், சரியாக செயல்படாதவர்கள் மீது கட்சி தலைமை எடுக்கும் நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கும். அமைச்சர்கள், நாடாளுமன்ற தேர்தல் தானே என்று மெத்தனமாக இருந்து விடாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பொறுப்பு அமைச்சராக உள்ள இடங்களில் தொடர்ந்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். தொகுதி பார்வையாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.