தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 83.5 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வினியோகம்!!

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 83.5 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-09-14 06:53 GMT

Passport

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியம் ஆகும். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகிறார்கள். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு பறந்து வருகிறார்கள். இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 42 லட்சத்து 17 ஆயிரத்து 661 பெண்கள், 56 லட்சத்து 75 ஆயிரத்து 179 ஆண்கள் என 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 512 பெண்கள், 57 லட்சத்து 35 ஆயிரத்து 854 ஆண்கள் என 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 17 லட்சத்து 27 ஆயிரத்து 89 பெண்கள், 70 லட்சத்து 58 ஆயிரத்து 703 ஆண்கள் என 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதிக பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சத்து 7 ஆயிரத்து 509 பெண்கள், 55 லட்சத்து 47 ஆயிரத்து 383 ஆண்கள் என 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேர் பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்.

Tags:    

Similar News