நடிகர் அரவிந்த் சாமிக்கு சம்பள பாக்கி - தயாரிப்பாளருக்கு வாரண்ட்
நடிகர் அரவிந்த் சாமிக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 16:32 GMT
நடிகர் அரவிந்த் சாமி
நடிகர் அரவிந்த் சாமிக்கு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காதது தொடர்பான வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
65 லட்சம் பாக்கி தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடக் கோரியும், நடிகர் அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார். சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.