தா.பழூர் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

தா.பழூர் அருகே ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-21 11:47 GMT
அரியலூர்,மே .21- ஜெயங்கொண்டம் அருகே அய்யனார் குளம் ஏரியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், செத்துக்கிடக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் அய்யனார் குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் அக்குளத்தில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான மீன்கள் திடீரென மர்மமான முறையில் செத்து மிதந்து கரை ஒதுங்கி வருவதால், அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்திவிட்டு சுகாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.
Tags:    

Similar News