பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மக்கள் புகார்

புத்தன் தருவை பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-06-09 13:18 GMT

குடிநீர் பிரச்சினை 

தூத்துக்குடி மாவட்டம் புத்தன் தருவை பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் சார்பில் எஸ்டிபிஐ கிளைச் செயலர் ரியாஸ், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தைச் சார்ந்த திருப்பணிபுத்தன்தருவை கிராமத்தில் பல மாதங்களாக முறையான குடிநீர்"விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றார்கள். கூட்டு"குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கபடுகிறது.

Advertisement

இது சம்மந்தமாக எங்களது பஞ்சாயத்து நிர்வாகிகளும் கண்டு கொள்வதில்லை. மற்ற அதிகாரிகளும் அப்படியே மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் புகார் அளிக்கபட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை.

இந்த குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக தங்களுக்கு புகார் அளிக்கபட்டு அதன்மீது நடவடிக்கை வரும்போதெல்லாம் சம்மந்தபட்ட அதிகாரிகள் பைப் உடைந்தது அது உடைந்தது இது உடைந்தது சரி செய்யபட்டு குடிநீர் வழங்கபட்டுவிட்டது என தங்களுக்கு பொய்யான தகவலை தந்து" புகாருக்கு முற்றுபுள்ளி வைத்துவிடுவார்கள்.

உண்மை அதுவல்ல. தூத்துக்குடி மாவட்டத்தில் கடைக்கோடியில் எங்கள் கிராமம் இருப்பதால் மற்ற கிராமங்களுக்கு முறையாக வழங்கப்படும் தண்ணீர் எங்கள் கிராமத்திற்கு மட்டும் முறையாக வழங்கபடுவதில்லை. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கபட்ட குடிநீர் தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கபட்டது. ஆகையால் சம்பந்தப்பட்ட உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News