மீன்கள் வாங்க குவிந்த மக்கள்

சென்னையில் மீன் கடைகளில் மீன் பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன்கள் விலை குறைந்திருக்கும் என்ற நோக்கில் மீன்கள் வாங்க மக்கள்குவிந்தனர்.

Update: 2024-06-16 14:10 GMT

சென்னையில் மீன் கடைகளில் மீன் பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீன்கள் விலை குறைந்திருக்கும் என்ற நோக்கில் மீன்கள் வாங்க மக்கள்குவிந்தனர்.


மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் வந்துள்ள முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் விலை குறைவாகவும் புதிய மீன்கள் வருகையும் இருக்கும் என்று மீன் பிரியர்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். அசைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டாலே மீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் மருத்துவர்களே மீன் சாப்பிட அறிவுரை வழங்குகின்றனர். குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக மீன் இருந்து வருகிறது.இதில் சில மீன்களில் புரதச்சத்துக்கள் , விட்டமின்கள் நிறைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் நிறைவடைந்து மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர். மீன்கள் விலை இதன்பின் குறையும் என்று தெரிவித்து வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் சற்று அதிகமாகவே மீன்கள் விலை இருப்பதாக மீனவர்கள் மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீன் கடைகளில் கானா கத்த மீன் 200 ரூபாய், கனவா மீன் 400 ரூபாய், வௌவா மீன் கிலோ 1100 ரூபாய், நண்டு ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், ஷீலா மீன் ஒரு கிலோ 500 ரூபாய், சங்கரா மீன் ஒரு கிலோ 450 ரூபாய், வஞ்சிரம் 1200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விற்பனை, இறால் ஒரு கிலோ 550 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News