பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்ற மக்கள்!
வேலூர் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வேலூர் ஆட்சியர் அலுவலக தலைவர் வைத்துள்ள பெட்டியில் போட்டு சென்றனர்.
Update: 2024-03-18 12:15 GMT
தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வேலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி திங்கள் கிழமையான இன்று வேலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்த மக்கள் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.