மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த விவசாய சங்கத்தினர்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த விவசாய சங்கத்தினர் 50 பேர்;
By : King 24x7 Website
Update: 2024-01-24 18:02 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த விவசாய சங்கத்தினர் 50 பேர்
2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர் அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாய சங்கத்தினர் 3000 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளதாக விவசாய சங்க தலைவர் தெரிவித்தார். நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, திரு. ராகேஷ் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.