சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய அனுமதி

சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.;

Update: 2024-06-08 01:40 GMT

பைல் படம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தாஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisement

இதனை எதிர்த்து கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். கூடுதல் கட்டுமானப்  பணிகள் மேற்கொண்டிருந்தால் ஆய்வு செய்தால் தானே  தெரிந்து கொள்ள முடியும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே 2021 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்னரே ஆய்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று சசிகலா தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆய்வின் போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அங்கிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News