மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரி பாஜக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும்

Update: 2024-04-23 03:21 GMT

மாணிக்கம் தாகூர் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்காக ஒரு மாத காலமாக அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார்.

  இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற இல்லத்தரசிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்திற்காக விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்தாக விருதுநகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வகுமார் என்பவர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று  விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News