நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்ப மனு வினியோகம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு இன்று முதல் வினியோகம் தொடங்கியது.;

Update: 2024-02-21 16:07 GMT

நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமான விநியோகம் இன்று தொடங்கி அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவதற்கான விருப்பமான விநியோகம் தொடங்கியது.

அதிமுக அலுவலகத்தில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 1 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்பம் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். பொது தொகுதிக்கு ரூ 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் செலுத்தி விருப்ப மணுக்களை பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் ஒரு தொகுதிக்கு ஒரு விருப்பம் மனுவை பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மணுக்களை பெறுவதற்கு காலையிலேயே அதிமுக அலுவலகத்தில் குவிந்த அதிமுக தொண்டர்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினர் விருப்ப மனு வாங்க வருகை. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடவும், சேலம் இளங்கோவன் பொதுச் செயலாளர் போட்டியிட, ஆதிராஜாராம் மத்திய சென்னை, தென் சென்னையில் போட்டியிட ஜெயவர்த்தன், கோகுல இந்திரா பொதுச் செயலாளர் போட்டியிட, என பலர் முதல் நாளே விருப்ப மனுக்களை வாங்கி உள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபாபு மற்றும் அவரது கணவர் இருவரும் விருப்பம் மனு பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News