தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு : சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு
தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
Update: 2024-06-14 02:58 GMT
சவுக்கு சங்கர்
2008 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையின் பணியாற்றியபோது சில ரகசிய உரையாடல்களை திருடி வெளியிட்டதாக சங்கருக்கு எதிராக சென்னை சிபிசிஐடி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு சவுக்கு சங்கரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. சென்னை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிசிஐடி காவல்துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசு தரப்பு சாட்சிகள், ஆவணங்களை முழுமையாக கவனத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்று சிபிசிஐடி மேல் முறையீட்டு மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.