நீர்வழி தடங்களில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணிகள் -அமைச்சர் ஆய்வு
நீர் நிலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்
Update: 2023-12-10 09:00 GMT
தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் வெள்ள மீட்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் முத்துசாமி கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்த ஆய்வில் நீர் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பை கழிவுகளால் தடுக்கப்பட்டு நீர் செல்லாமல் கால்வாய்களின் மீறி குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்து வருவதை அறிந்து நீர் வழித்தடங்களில் குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீச வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் நீர் வழித்தடங்களில் செல்லும் பகுதிகளில் இணைப்பு அருகே சோதனை முறையில் வலைகளை அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை சேமித்து அதை அகற்ற திட்டமிட்டு இன்று அதன் பணிகளை அமைச்சர் முத்துசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருபருத்திகுன்றம் சாலையில் உள்ள கால்வாயில் மேற்கொண்டார். இதில் பல்வேறு முறைகளில் கையாளவும் உடனடியாக அகற்றும் நிலையில் தேங்காமல் நீர் வழித்தடங்கள் செல்லும் என்பதால் சோதனை முயற்சி மேற்கொண்டதாகும் தெரிவித்தார். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் உள்ள மஞ்சள் நீர் கால்வாய் இரும்பு தகடு பொருத்தப்பட்டு அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது பொதுமக்கள் மனசு வைத்தால் மட்டுமே இது போன்ற கழிவுகளை மாநகராட்சிகள் ஒப்படைக்கும் நிலையில் வழித்தடங்கள் தங்கு தடை இன்றி இருக்கும் என்பது நிதர்சனம். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் , ஆணையர் செந்தில் முருகன், பொறியாளர் கணேசன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.