மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி
மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்;
Update: 2024-03-14 01:14 GMT
மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (13.03.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி மேற்கொள்ளும் அடியார்களுக்கு மண்வெட்டி, ஏணி, ஒட்டடை குச்சி, துடைப்பம், தண்ணீர் பீச்சும் இயந்திரம் மற்றும் குழாய்கள் சலவைப் பொருட்கள் / தூய்மைப் பொருட்கள் வழங்கி, உழவாரப் பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகாதேவி, திருக்கோயில் செயல் அலுவலர் ம.சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.