ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி!!

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் உறுதியளித்தார்.

Update: 2024-12-03 06:10 GMT

CM Stalin & PM Modi

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சேதத்தின் வீரியத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Tags:    

Similar News