ஜெகத்ரட்சகன் மக்களுக்கு செய்தது என்ன? - பாமக வேட்பாளர் பாலு கேள்வி!

காட்பாடி கரசமங்கலம் பகுதியில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-24 10:13 GMT

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு வேட்பாளராக போட்டியிடுகிறார். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் பாமாக்கு மாவட்ட செயலாளர்கள் நிலவழகன் மற்றும் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக வேட்பாளர் பாலு பேசுகையில்,"அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி என்பது நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் கேட்பாரற்று இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்பதற்காக உங்களில் ஒருவராக, குரல் கொடுக்க இந்த தொகுதியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்பதை வாக்குறுதியாக கொடுக்கிறேன்.

தேர்தல் முடிந்ததும் உங்களுடன் இருப்பேன் என்பது ஒரு வாக்குறுதியா. ஓட்டு போட்ட மக்களுடன் வாழ்வதுதான், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை. ஆனால் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாட்டிற்காக இதற்கும் ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்னால் வந்த திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இந்த பக்கமே திரும்பி பார்க்காதவர். மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெகத்ரட்சகன் ஆயிரம் கோடி ரூபாய் தருகிறேன் ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுங்கள் என்று திமுக தலைமையிடம் கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த திமுக தலைமை 1000 கோடி,2000 கோடி செலவு செய்வதற்கு நீங்கள் ஒரே ஆள் நீங்கள்தான் என்று மீண்டும் அரக்கோணம் தொகுதியில் களம் இறக்கி இருக்கிறது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்த முறையும் போட்டியிடுகின்ற ஜெகத்ரட்சகன் நாடாளுமன்றத்தில் இந்த தொகுதி மக்களுக்காக எழுப்பிய கேள்விகள் எத்தனை. கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளார். ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேருக்கு நேர் விவாதிக்க இந்த வழக்கறிஞர் பாலு தயாராக இருக்கிறேன். ஜெகத்ரட்சகன் தயாராக இருக்கிறாரா? அவருடைய சௌகரியமான தேதி கொடுக்கட்டும். அவர் ஒரு பெரிய கோடீஸ்வரர். அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும். என் வாழ்நாளில் பொதுமக்களுக்கு நான் செய்தது உயர் நீதிமன்றத்தில் நான் நடத்திய பொது நல வழக்குகள் மற்றும் என் குடும்ப பின்னணி என்ன, என் சொத்து மற்றும் என் குற்றப் பின்னணி என்ன என்பதை விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.வாக்குறுதிகள் தொடர்பாகவும் பொது விவாதம் நடத்துவோம்," என்று சவால் விடுத்தார்.

Tags:    

Similar News