பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாமகவினர் ஆறுதல்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என பாமக மாநில பொருளாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-10-20 04:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சிவாகாசி அருகே ரெங்கபாளையத்தில் கடந்த 17ம் தேதி கணிஷ்கர் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு வேலையில் ஈடுபட்டிருந்த 13 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மற்றும் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி  விருதுநகர் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில், மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களை நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் அளித்தார். மேலும் அவர்களுக்கு உதவி வேண்டும் என்றால் எப்பொழுதும் செய்ய தயாராக உள்ளேன் என்று உறுதியளித்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது உயிரிழந்து வாடும் 14 குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ 3 லட்சம் நிதியுதவி அளித்தது போதாது என்றும். உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.


Tags:    

Similar News