நீட் விலக்கு தீர்மானத்திற்கு பாமக ஆதரவு,

முதலமைச்சரின் நீட் விலக்கு தீர்மானத்தை ஆதரித்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி - பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த போதிலும் அவரும் வரவேற்று பேசி உள்ளதற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 16:35 GMT

பாமக

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு தொடர்பான தனித் தீர்மானத்தை ஆதரித்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர். பாஜக தவிர்த்து இதர கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து உரையாற்றிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். முதலமைச்சரின் உரையில், இந்த தீர்மானத்தை வழிமொழிந்த பலர் உரையாற்றினர். முதலில் இந்த தீர்மானத்தை எடுத்து வைக்க வாய்ப்பு வழங்கிய பேரவைக்கும், வரவேற்று பேசிய அனைவருக்கும் நன்றி. வரவேற்று பேசிய உறுப்பினர்கள் மாநில உரிமைக்கு குரல் கொடுத்து பேசி உள்ளார்கள். பாமகவின் ஜி.கே.மணி பாஜகவின் கூட்டணிக் கட்சியில் இருந்தாலும் அவரும் வரவேற்று பேசி உள்ளார். அதற்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News