சிறுமி கடத்தல் - வாலிபர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-08 06:01 GMT
போக்சோ வழக்கு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே தொளசம்பட்டி உள்ள உப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மகன் ரமேஷ் அரவிந்த் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் ஆத்தூர் அருகே. உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது ரமேஷ் அரவிந்த் 17 வயது சிறுமியை 5 ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில்போலீசார் சிறுமியை மீட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்திய ரமேஷ் அரவிந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News