பாஜக யாத்திரைக்கு மீண்டும் காவல்துறையினர் அனுமதி மறுப்பு
பாதயாத்திரை அனுமதி மறுத்தாலும் யாத்திரை நடத்தப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 15:00 GMT
பாஜக யாத்திரை
வடசென்னை பகுதியான வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள தனியார் பள்ளியில் நடத்த திட்டமிட்டு பொதுக்கூட்டம் தற்போது தங்கசாலை பகுதியில் நடத்தப்பட உள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதயாத்திரைக்கு அனுமதி மறுத்தாலும் யாத்திரை நடத்துவதாக பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.