காவல்துறையினர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை.
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-22 08:26 GMT
அரசு பேருந்து (பைல் படம்)
தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் கட்டணமின்றி தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும், மற்ற நேரங்களில் காவலர்கள் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச்சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.