மருத்துவமனையில் மொபைல் திருடியவர் கைது
கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்;
Update: 2023-12-03 09:18 GMT
வாலிபர் கைது
திருக்கோவிலுார் அடுத்த விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் சக்திவேல்,42; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் 4.30 மணியளவில் மருத்துவமனையின் முதல் தளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு சந்தேகிக்கும்படி இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஆறுமுகம்,42; என்பதும், மருத்துவமனையில் இருந்த நபர்களிடமிருந்து 2 மொபைல்போன்களை திருடியதும் தெரிந்தது. உடன் ஆறுமுகத்திடமிருந்து 2 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.