தேர்தல் விதிமுறைகள்: போலீசார் வாகன சோதனை
வாக்களர்களுக்கு பணம்,பரிசு பொருட்கள வழங்குவதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Update: 2024-03-17 09:23 GMT
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்/19-ம் தேதி அறிவிக்கபடுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுவர் விளம்பரங்கள் அகற்றுதல், தலைவர்கள் சிலைகளை மூடுவது மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சி தலைவர்கள் போட்டோகள் அகற்றுதல் போன்ற தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் நேற்று முதல் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த உடன் நேற்று மாலை முதல் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட தொடங்கி உள்ளனர். GPS கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனம் அதிகாரி மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் என ஒரு வாகனத்திற்கு 5- -நபர்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டதில் மொத்த பறக்கும் படை குழுக்கள் -54 1 சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் என ஒதுக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் வரக்கூடிய வாகனங்களை பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.