காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போதை ஆசாமி ரகளை

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மது போதையில் வந்த போதை ஆசாமி ஆணையரை சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என அலுவலகத்தில் நுழைய முயன்று காலையில் படுத்து ரகளை செய்த நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

Update: 2024-06-17 16:55 GMT

கோப்பு படம்

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மது போதையில் வந்த போதை ஆசாமி ஆணையரை சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என அலுவலகத்தில் நுழைய முயன்றார். அப்பொழுது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றால் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்வேன் என்றவர், சாலையில் சென்று படுத்து ரகளையில் ஈடுபட்டார் உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
Tags:    

Similar News