லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்

Update: 2023-12-13 01:38 GMT

அங்கித் திவாரி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நேற்று  விசாரணைக்கு வந்தது.இதனையடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித்திவாரி ஆஜர் படுத்தப்பட்டார்.திண்டுக்கல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அன்கித்திவாரிக்கு இரண்டு நாட்கள் போலீஸ்காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
Tags:    

Similar News