கார் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

திருச்செந்தூர் அருகே திருநெல்வேலி சாலையில் நத்தகுளம் வளைவில் சுற்றுலா வேனும் காரும் மோதிய விபத்தில் உதவி ஆய்வாளர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-23 11:18 GMT

விபத்து

தூத்துக்குடி மாவட்டம் உணவு கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை காவலர்கள் நாகராஜ், லோகேஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதற்கான சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட்ட போது திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் நத்தகுளம் வளைவில் வந்த போது வந்த போது தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானந்தல் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் மற்றும் குடும்பத்தினர் 12 பேர் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சுற்றுலா வேனில் திருநெல்வேலி சென்ற போது சுற்றுலா வேனும் காரும் மோதிக்கொண்டன.

இதில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உதவி ஆய்வாளரின் உடலை பார்த்து நடந்த சம்பவங்கள் குறித்து சக காவலர்களிடம் கேட்டறிந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராயம் விற்பனையில் பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தையை பார்ப்பதற்காக விடுமுறையில் சென்ற நிலையில், உணவு கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி உத்தரவின்படி உடனடியாக பணிக்கு வந்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து நடந்த விபத்தில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விபத்து நடந்த உடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், செய்தியாளர்களும், வருவாய் துறையினரின் உதவியுடன் அவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News