வெள்ளத்தில் போன ரூ.4000 கோடி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்

Update: 2023-12-09 07:20 GMT
முன்னாள் மத்திய அமைச்சர் பேட்டி.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, சென்னையில்  மழை வெள்ளம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் பெருவெள்ளம் வந்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்களை காப்பாற்ற முடியும் என தி.மு.க. அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் இந்த மழைக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. நான்காயிரம் கோடி ரூபாய் எங்கே போனது. இந்த திடத்தால் மழை நீர் வழிந்து ஓடவில்லை. மாறாக 4000 கோடி ரூபாய் தான் வழிந்து ஓடியுள்ளது. சென்னையில் தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம் இருக்கிறது. இந்த மழைக்கு அவர்கள் எங்கே சென்றார்கள். தமிழக அரசு இனிமேலாவது எந்த திட்டத்திற்கு பணம் ஒதுக்கப்படுகிறதோ அதனை நிறைவேற்ற முன் வர வேண்டும்.நான்காயிரம் கோடிக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை அதற்குள் 5000 கோடி என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News