பொன்முடி எம்.எல்.ஏவாக தொடர்வார் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைதேர்தல் இல்லை, பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடருவார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

Update: 2024-03-17 02:55 GMT

சத்யபிரதா சாகு

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அவர் கூறுகையில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்ட தேர்தலாக நடைபெறும்.. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்.. விளவங்கோடு இடைதேர்தலும் அன்றே நடைபெறும் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்.. தேர்தல் நடத்தை முறைகள் அமலுக்கு வந்துள்ளது.

வாக்காளர்கள் யாராவது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் 85 வயதிற்கு மேல் உள்ள முதியோர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தலாம்.. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் உடனடியாக பணிகளை தொடங்குவார்கள்.

திருக்கோவிலூருக்கு  இடைதேர்தல் இல்லை.பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடருவார் ரூபாய் 50 ஆயிரம் வரை தான் பணம் எடுத்து செல்ல அனுமதி வாக்கு செலுத்த 7 நாட்கள் முன்பு பூச் சிலிப் வழங்கப்படும்.   பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது குறித்த கேள்விக்கு, தேர்தல் ஆணையத்தை அணுககினால் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான குழு பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.  இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது. என்றார்.

Tags:    

Similar News